< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
விருதுநகரில் கனிமவள குவாரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக வழக்கு - மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி
|28 Aug 2022 6:26 AM IST
வழக்கு விசாரணையின் போது அடிப்படை ஆதாரமின்றி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
மதுரை,
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவா என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், விருதுநகர் மாவட்டத்தில் விதிகளை மீறி சட்டவிரோதமாக 33 கனிமவள குவாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்கியதாகவும், அவருக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்த போது, அடிப்படை ஆதாரமின்றி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் எனவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்ததோடு, மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.