< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அர்ச்சகர்களின் நியமனத்தை ரத்து செய்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு தடை..!
|11 Aug 2023 3:35 PM IST
அர்ச்சகர்களின் நியமனத்தை ரத்து செய்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு தடைவிதித்துள்ளது.
மதுரை,
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணைப்படி பணியில் சேர்ந்த அர்ச்சகர்களின் நியமனத்தை ரத்து செய்த உத்தரவுக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை தடை விதித்துள்ளது. தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், அர்ச்சகர்களின் நியமனத்தை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சுந்தர் , பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது குறித்து அரசு தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.