< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மதுரை: சாலையின் நடுவே கவிழ்ந்த அரசு பஸ் - 6 பேர் படுகாயம்
|19 Aug 2022 8:14 AM IST
பரவை அருகே அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
வாடிப்பட்டி,
கோயம்புத்தூரில் இருந்து மதுரை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை திண்டுக்கலை சேர்ந்த பிரவீன் குமார்(45) என்பவர் ஒட்டி வந்தார்.
பழனி ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த முருகன் (40)நடத்துனராக இருந்தார். அதில் 56 பேர் பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். நேற்று இரவு 11:30 மணி அளவில் அந்த பஸ் பரவை கொண்ட மாரி பாலம் அருகே வந்த போது திடீரென்று எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.