< Back
மாநில செய்திகள்
தேசிய போட்டிக்கு மதுரை மாணவிகள் தேர்வு
மதுரை
மாநில செய்திகள்

தேசிய போட்டிக்கு மதுரை மாணவிகள் தேர்வு

தினத்தந்தி
|
17 Oct 2023 4:17 AM IST

தேசிய போட்டிக்கு மதுரை மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.


இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் சார்பில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான தேசிய அளவிலான போட்டிக்கு வீரர்களை தேர்வு செய்யும் போட்டிகள் நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் மதுரை திருப்பாலை ஸ்ரீராம் நல்லமணி யாதவா பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி தமிழினி, தேசிய அளவிளான நீச்சல் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்படி, டெல்லியில் நடைபெறும் தேசிய போட்டியில் தமிழக அணி சார்பில் கலந்து கொள்கிறார்.

இதே பள்ளியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி கோதைநாயகி, தேசிய அளவிளான கால்பந்து அணியின் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் தேர்வு பெற்றார். இவர், பஞ்சாபில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணிக்காக விளையாட உள்ளார். தேசிய அளவில் விளையாட்டு போட்டிக்கு தேர்வு பெற்றுள்ள மாணவிகளை, நல்லமணி யாதவா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைவர் நல்லமணி, பள்ளி செயலாளர் ராஜேந்திரன், தலைமை ஆசிரியை அசோதை, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்