< Back
மாநில செய்திகள்
மதுரை திமுக கவுன்சிலர் தற்காலிக நீக்கம் - பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
மாநில செய்திகள்

மதுரை திமுக கவுன்சிலர் தற்காலிக நீக்கம் - பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

தினத்தந்தி
|
9 March 2023 11:27 AM IST

மதுரை மாநகராட்சியின் 62-வது வார்டு கவுன்சிலர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

சென்னை,

மதுரை மாநகராட்சியின் 62-வது வார்டு கவுன்சிலர் ஜெயச்சந்திரன் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

கட்சி கட்டுப்பாட்டை மீறி, அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நிலம் வாங்கி தருவதாக முதியவரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த வழக்கில் கவுன்சிலர் ஜெயச்சந்திரன் கைதான நிலையில், திமுக தலைமை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

மேலும் செய்திகள்