< Back
மாநில செய்திகள்
மாநில அளவிலான கலை போட்டிகள்; மதுரை கல்லூரி அணி சாம்பியன்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

மாநில அளவிலான கலை போட்டிகள்; மதுரை கல்லூரி அணி சாம்பியன்

தினத்தந்தி
|
21 Oct 2023 3:00 AM IST

நத்தத்தில் நடந்த மாநில அளவிலான கலை போட்டிகளில் மதுரை கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

நத்தம் என்.பி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான 'டேலன்சியா 2கே23' என்ற தலைப்பில் துறை சார்ந்த பல்வேறு கலை போட்டிகள் நடைபெற்றன. போட்டிகள் தொடக்க விழாவுக்கு என்.பி.ஆர். கல்விக்குழும நிர்வாக மேலாளர் தேவி தலைமை தாங்கினார்.

கல்லூரி தமிழ்த்துறை தலைவர் சங்கரழகு வரவேற்றார். இந்த போட்டிகளில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20 கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இதில், பல்வேறு போட்டிகளில் மாணவ-மாணவிகள் தங்களது திறமைகளை வெளிகாட்டினர். முடிவில் மதுரை என்.எம்.ஆர். கல்லூரி அணி முதலிடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. மதுரை அமெரிக்கன் கல்லூரி அணி 2-ம் இடத்தை பிடித்தது.

பின்னர் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், என்.பி.ஆர். கல்லூரி முதல்வர்கள் சீனிவாசன் (கலை மற்றும் அறிவியல்), ஆனந்த் (பாலிடெக்னிக்), அன்னலட்சுமி (நர்சிங்) ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் கல்லூரி கணினி அறிவியல் துறை தலைவர் பாபிநாத் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்