< Back
மாநில செய்திகள்
மதுரை எய்ம்ஸ் விவகாரம்: உங்கள் அரசியலுக்கு தமிழ்நாடு தகுந்த பதில் அளிக்கும் - சு.வெங்கடேசன் எம்பி
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் விவகாரம்: உங்கள் அரசியலுக்கு தமிழ்நாடு தகுந்த பதில் அளிக்கும் - சு.வெங்கடேசன் எம்பி

தினத்தந்தி
|
11 Feb 2023 12:34 AM IST

நிதி ஒதுக்கீடு செய்வதில் வஞ்சிக்கும் உங்கள் அரசியலுக்கு தமிழ்நாடு தகுந்த பதில் அளிக்கும் என்று சு.வெங்கடேசன் எம்பி கூறியுள்ளார்.

மதுரை,

மதுரை எய்ம்ஸுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு என்ன மனப்பான்மையுடன் செயல்படுகிறது என்பதற்கு இன்று அவையில் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சொன்ன பதில் சிறந்த எடுத்துக்காட்டு என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "மதுரை எய்ம்ஸுக்கும், தமிழ்நாட்டு திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்வதில் ஒன்றிய அரசு என்ன மனப்பான்மையுடன் செயல்படுகிறது என்பதற்கு இன்று அவையில் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சொன்ன பதில் சிறந்த எடுத்துக்காட்டு.

எங்களை வஞ்சிக்கும் உங்கள் அரசியலுக்கு தமிழ்நாடு தகுந்த பதில் அளிக்கும்" என்று கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்