< Back
மாநில செய்திகள்
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் - மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி எஸ்.பி.சிங் தகவல்
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் - மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி எஸ்.பி.சிங் தகவல்

தினத்தந்தி
|
30 Dec 2023 4:20 PM IST

இந்தியாவில் ஜே.என்.1 வகை தொற்று கட்டுபாட்டில் இருப்பதாக மத்திய இணை மந்திரி எஸ்.பி.சிங் தெரிவித்தார்.

மதுரை,

மதுரை எய்ம்ஸ் நிர்வாகத்துடன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி எஸ்.பி.சிங் இன்று மதுரைக்கு வருகை தந்தார். தொடர்ந்து விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து ஜே.என்.1 வகை கொரோனா குறித்த கேள்விக்கு பதலளித்த அவர், இந்தியாவில் ஜே.என்.1 வகை தொற்று கட்டுபாட்டில் இருப்பதாகவும், இந்த புதிய வகை கொரோனாவின் தாக்கம் குறைவுதான் என்றும் கூறினார்.


மேலும் செய்திகள்