< Back
மாநில செய்திகள்
மதுரை: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார் நடிகர் சூரி
மாநில செய்திகள்

மதுரை: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார் நடிகர் சூரி

தினத்தந்தி
|
24 March 2023 8:56 PM IST

மதுரையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை நடிகர் சூரி பார்வையிட்டார்.

மதுரை,

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சி மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது. 70 ஆண்டுகால பொது வாழக்கையில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்த சவால்கள், மக்கள் நலனுக்காக அவர் மேற்கொண்ட போராட்டங்கள் ஆகியவற்றை இன்றைய இளம் தலைமுறை தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு அரிய புகைப்படங்கள், தத்ரூப காட்சி வடிவமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த புகைப்பட கண்காட்சியை காமெடி நடிகர் சூரி பார்வையிட்டார். கண்காட்சியை பார்த்த பின்னர் அவர் கூறும்போது, இந்தியாவின் ஒட்டுமொத்த அரசியலையே தெரிந்து கொண்டதாக அவர் கூறினார்.

மேலும் செய்திகள்