< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் பணி நியமன உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு தடை
|20 July 2023 7:44 PM IST
தமிழ்நாட்டில் 1,021 அரசு மருத்துவர்கள் பணியிடங்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சென்னை,
தமிழகத்தில் 1021 அரசு மருத்துவர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில், தேர்ச்சி பெற்று பணிநியமனத்திற்கு காத்திருப்பவர்களுக்கு நியமன ஆணை வழங்க தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் மருத்துவ உதவி புரிந்த மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்கப்பட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால் இந்த உத்தரவை பின்பற்றாமல், தமிழகத்தில் காலியாக இருந்த 1021 அரசு மருத்துவர் பணியிடங்களுக்கு தேர்வை நடத்தியது தொடர்பாக 14 மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கில், சென்னை ஐகோர்ட்டு நீதிமன்றம் இன்று விசாரித்ததில், தேர்வு முடிந்து பணி ஆணை வழங்குவதில் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.