< Back
மாநில செய்திகள்
மதுராந்தகம் முருகன் கோவில் குளத்தில் துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் அவதி
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மதுராந்தகம் முருகன் கோவில் குளத்தில் துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் அவதி

தினத்தந்தி
|
6 Sept 2023 5:37 PM IST

கோவில் குளத்தில் துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.

மதுராந்தகம்,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் முருகன் கோவில் உள்ளது இங்கு கோவிலின் பின்பகுதி பெரிய குளம் உள்ளது. இந்த குளம் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் பாசி படிந்து மரங்களும் முட்புதர்களும் சூழ்ந்த நிலையில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நகராட்சி குப்பைகள் அருகிலேயே கொட்டி விடுவதாலும் துர்நாற்றம் ஏற்பட்டு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அருகில் நூலகம், கோவில் மற்றும் பள்ளி, குடியிருப்பு பகுதிகள் அங்கு உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி உள்ளனர் இதனை தூர்வாரி சரி செய்யப்பட வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்