< Back
மாநில செய்திகள்
மாதவரம் தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
சென்னை
மாநில செய்திகள்

மாதவரம் தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

தினத்தந்தி
|
24 Nov 2022 11:37 AM IST

மாதவரம் தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட புழல் அடுத்த விநாயகபுரம் நேரு நகரில் சுமார் 40-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளைச் சேர்ந்த பொதுமக்கள், கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கடந்த 21-ந் தேதி அரசு நீர்வளத்துறையினர் பொதுமக்கள் குடியிருக்கும் இடம் அரசுக்கு சொந்தமானது என்று கூறி அவர்களை உடனடியாக வீடு களை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாதவரம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தண்டையார்பேட்டை கோட்டாட்சியர் ரங்கராஜன், மாதவரம் தாசில்தார் நித்தியானந்தம் ஆகியோர் முற்றுகையிட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்