< Back
மாநில செய்திகள்
லாரி திருட முயன்ற 5 பேரை மடக்கி பிடித்த மாதவரம் போலீஸ்
சென்னை
மாநில செய்திகள்

லாரி திருட முயன்ற 5 பேரை மடக்கி பிடித்த மாதவரம் போலீஸ்

தினத்தந்தி
|
12 Jun 2022 12:50 PM IST

சென்னை அருகே லாரி திருட முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கொளத்தூர்:

சென்னை மாதவரம் ரவுண்டானா, மஞ்சம்பாக்கம் அருகே வெளிமாநில மற்றும் வெளி மாவட்டங்களில் வரும் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்க படுவது வழக்கம். ஆயிரக்கணக்கான லாரிகள் உள்ள நிலையில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள போதை ஆசாமிகள் அடிக்கடி வெளிமாநில லாரி டிரைவர்களை மிரட்டி பணம் பறிப்பது மற்றும் உதிரிபாகங்கள் லாரிகளை திருடி வருவதாக போலீசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதுகுறித்து மாதவரம் துணை கமிஷனர் குமார், உதவி கமிஷனர் அருள் சந்தோஸ் முத்து மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் நேற்று இரவு ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது சந்தேகப்படும் படியாக இருந்த 5 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

அதில் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ரகுமான் (22) , மணிகண்டன் (24) , சஞ்சய் (29), விக்னேஸ்வரன் (21) மற்றும் ஆனந்த் (29) ஆகியோரை 5 பேர் லாரியை திருட வந்ததும் தெரியவந்தது.

செங்குன்றம் சோழவரம் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ள அவர்களிடமிருந்து 8 செல்போன் மற்றும் 3 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்