< Back
மாநில செய்திகள்
ராயபுரத்தில் பிளாஸ்டிக் கப் தயாரித்த தொழிற்சாலைக்கு சீல்
சென்னை
மாநில செய்திகள்

ராயபுரத்தில் பிளாஸ்டிக் கப் தயாரித்த தொழிற்சாலைக்கு சீல்

தினத்தந்தி
|
17 Jun 2022 12:10 PM IST

ராயபுரத்தில் பிளாஸ்டிக் கப் தயாரித்த தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ராயபுரம் மேற்கு கல்மண்டபம் சாலை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் தனது வீட்டின் கீழ் பகுதியில் விக்னேஷ் பேப்பர் இன்டஸ்ட்ரீஸ் என்ற தொழிற்சாலையை நடத்தி வருகிறார்.

இங்கு தமிழக அரசு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட டீ கப் தயாரிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த வடக்கு மாநகர நல அலுவலர் டாக்டர் லட்சுமிதேவி, மண்டல நல அலுவலர் டாக்டர் வேல்முருகன், பகுதி சுகாதாரத்துறை அலுவலர் மாப்பிள்ளை துரை உள்ளிட்ட அதிகாரிகள் தொழிற்சாலையை சோதனை செய்தனர்.

அப்போது கடைகளுக்கு அனுப்புவதாக தயாரித்து வைத்திருந்த பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட டீ கப் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 2 டன் எடையுள்ள பிளாஸ்டிக் கப்புகளை பறிமுதல் செய்து தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மேலும் செய்திகள்