< Back
மாநில செய்திகள்
திருமயம் அருகே மஞ்சுவிரட்டு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

திருமயம் அருகே மஞ்சுவிரட்டு

தினத்தந்தி
|
21 May 2022 12:43 AM IST

திருமயம் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 12 பேர் காயம் அடைந்தனர்.

திருமயம்,

திருமயம் அருகே குழிபிறையில் உலகநாயகி அம்மன் சந்திக்கருப்பர் கோவில் வைகாசி திருவிழாவையொட்டி வாகை கண்மாயில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகளும், 200 காளையர்களும் பங்கேற்றனர். களத்தில் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்ட காளைகளை வீரர்கள் ஆர்வமுடன் அடக்கினர்

துள்ளி குதித்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை காளையர்கள் மல்லுக்கட்டி மடக்கி பிடித்த நிகழ்ச்சியை குழிபிறை பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

மஞ்சுவிரட்டில் காளைகளை பிடித்த வீரர்களுக்கும், நீண்ட நேரம் வீரர்களை திணறடித்த காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் காளைகள் முட்டியதில் 12 பேர் காயம் அடைந்தனர். பலத்த காயமடைந்தவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். முன்னதாக பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீஸ் துணை சூப்பிரண்டு அப்துல்ரகுமான் தலைமையில் பனையப்பட்டி போலீசார் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்