< Back
மாநில செய்திகள்
எம்.சாண்ட் கடத்தி வந்த லாரி சிக்கியது
கடலூர்
மாநில செய்திகள்

எம்.சாண்ட் கடத்தி வந்த லாரி சிக்கியது

தினத்தந்தி
|
8 Sept 2022 10:18 PM IST

வேப்பூரில் எம்.சாண்ட் கடத்தி வந்த லாரி சிக்கியது

ராமநத்தம்

திருச்சியில் இருந்து கடலூர் மாவட்டம் வேப்பூர் வழியாக சென்னைக்கு எம்.சாண்ட் கடத்தி செல்லப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விழுப்புரம் மண்டல புவியியாளர் அருள்முருகன் தலைமையில் ஊழியர்கள் வேப்பூர் கூட்டுரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த டாரஸ் லாரியின் டிரைவர் லாரியை நடுவழியில் நிறுத்தி விட்டு தப்பி ஓடினார். உடனே அதிகாரிகள் அந்த லாரியை சோதனை செய்த போது எம்.சாண்ட் கடத்தி வந்தது தொியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை வேப்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவர் மற்றும் லாரி உரிமையாளரை தேடி வருகிறார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்