< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
வானகரம் அருகே லாரி மீது சொகுசு கார் மோதல்; 2 பேர் காயம்
|2 March 2023 6:31 PM IST
வானகரம் அருகே லாரி மீது சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
சென்னை வானகரம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலை ஓரம் டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதன் பின்னால் வந்த சொகுசு கார் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது.
இந்த விபத்தில் காரில் பயணித்த 3 பேரில் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்களை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தில் சேதம் அடைந்த காரை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.