< Back
மாநில செய்திகள்
சந்திர கிரகணம்: திருப்பரங்குன்றம் கோவிலில் நாளை இரவு 7 மணிக்கு நடை அடைப்பு
மதுரை
மாநில செய்திகள்

சந்திர கிரகணம்: திருப்பரங்குன்றம் கோவிலில் நாளை இரவு 7 மணிக்கு நடை அடைப்பு

தினத்தந்தி
|
27 Oct 2023 2:58 AM IST

சந்திர கிரகணத்தையொட்டி திருப்பரங்குன்றம் கோவிலில் நாளை இரவு 7 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் துணை கமிஷனர் சுரேஷ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாளை (சனிக்கிழமை) இரவு 1.05 மணி முதல் இரவு 2.23 வரை முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது ஆகவே நாளை இரவு 7 மணி முதல் நடைசாத்தப்படுகிறது. மறுநாள் 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வழக்கம் போல காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்