< Back
மாநில செய்திகள்
சந்திர கிரகணம்: தஞ்சை பெரிய கோவிலில் நடை அடைப்பு...!
மாநில செய்திகள்

சந்திர கிரகணம்: தஞ்சை பெரிய கோவிலில் நடை அடைப்பு...!

தினத்தந்தி
|
8 Nov 2022 2:16 PM IST

சந்திர கிரகணத்தையொட்டி, தஞ்சை பெரிய கோவிலில் நடை அடைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் இன்று (8- ந்தேதி) பிற்பகல் 2.39 மணியளவில் சந்திர கிரகணம் தொடங்குகிறது. முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3.46 மணியளவில் தொடங்கி 5.12 மணி வரை இருக்கும். பின்னா் பகுதி அளவு சந்திர கிரகணம் 6.19 மணியளவில் முடிவடைகிறது.

சந்திர கிரகணத்தையொட்டி பெரும்பாலான கோவில்களில் நடை அடைக்கப்பட்டு, பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், சந்திர கிரகணத்தையொட்டி, தஞ்சை பெரிய கோவிலில் நடை அடைக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர்.

மதியம் 12 மணிக்கு அடைக்கப்பட்ட கோவில் நடை, இரவு 7 மணிக்கு திறக்கப்படும் என்றும் இரவு 7.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்