< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
நிலவு-சந்திரயான்-3 விண்கலம் மாதிரி வடிவம்
|22 Oct 2023 2:32 AM IST
தஞ்சை ரெயில் நிலையத்தில் நிலவு-சந்திரயான்-3 விண்கலம் மாதிரி வடிவம் வைக்கப்பட்டுள்ளது.
நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவைத் தலைநிமிரச் செய்திருக்கிறது இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம். இதை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்லும் வகையில் மத்தியஅரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தஞ்சை ரெயில் நிலையத்தில் சந்திரயான்-3 விண்கலம் மற்றும் நிலவின் மாதிரி வடிவங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தேசிய கொடி மற்றும் பிரதமர் மோடியின் உருவப்படமும் இடம் பெற்றுள்ளன. விண்வெளி சக்தி புதிய இந்தியா என்ற வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த மாதிரி வடிவங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். மேலும் இந்த மாதிரி வடிவங்கள் முன்பு நின்று ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.