< Back
மாநில செய்திகள்
விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் குறைந்த மின்னழுத்தம் மின்வாரிய குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் புகார்
விழுப்புரம்
மாநில செய்திகள்

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் குறைந்த மின்னழுத்தம் மின்வாரிய குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் புகார்

தினத்தந்தி
|
10 July 2022 2:31 PM GMT

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் குறைந்த மின்னழுத்தம் வருவதாக மின்வாரிய குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர்.

விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் மாதாந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திர விஜய் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இக்கூட்டத்தில், விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் உள்ள குடியிருப்புகளில் குறைந்த மின்னழுத்தம் வருவதாகவும், அதனை உடனடியாக சரிசெய்து தர வேண்டும் மற்றும் விவசாய மின் இணைப்பு கேட்டும், வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்து தரக்கோரியும் 20-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். இம்மனுக்கள் மீது ஒரு வார காலத்திற்குள் தீர்வு காணப்படுவதாக மேற்பார்வை பொறியாளர் உறுதியளித்தார்.

இக்கூட்டத்தில் செயற்பொறியாளர் (பொது) மதனகோபால், விழுப்புரம் கோட்ட செயற்பொறியாளர் சைமன்சார்லஸ் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்