< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
காதல்ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி
|17 Aug 2023 12:15 AM IST
திண்டிவனத்தில் காதல்ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திண்டிவனம்
திண்டிவனத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் வானூர் பகுதியை சேர்ந்த மாணவியும், திண்டிவனம் பகுதியை சேர்ந்த 18 வயது வாலிபரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று திண்டிவனம், காவேரிபாக்கம் பகுதியில் வாலிபரும், மாணவியும் மயங்கி கிடந்தனர். பின்னர் அவர்கள் பாதாம்பாலில் பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டா்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். காதல்ஜோடி எதற்காக தற்கொலைக்கு முயன்றனர் என்பது குறித்து திண்டிவனம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் திண்டிவனத்தில் பரபரப்பு ஏற்பட்டது.