< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
காதல் திருமணம் செய்த வாலிபர் திடீர் சாவு
|5 Oct 2023 1:10 AM IST
காதல் திருமணம் செய்த வாலிபர் திடீரென இறந்தார்.
ஸ்ரீரங்கம்:
கிருஷ்ணகிரி மாவட்டம், அந்தூர் செட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரெங்கநாதனின் மகன் ராஜா(வயது 34). இவர் கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்த செல்வி (28) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்கள் தங்களது நண்பருடன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தனர். காரை மேலூர் ரோடு பகுதியில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு ராஜா இறங்கியபோது திடீரென அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து சிகிச்சைக்காக அவரை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.