< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
காதல் திருமண ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
|2 Sept 2022 2:55 AM IST
காதல் திருமண ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
முசிறி:
முசிறியை அடுத்த தும்பலம் கீழத்தெருவை சேர்ந்த ராஜேந்திரனின் மகள் தர்ஷினி. இவர் குளித்தலையை அடுத்த அய்யர்மலை அரசு கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார். இவரும், இவரது உறவினரான தொட்டியம் அப்பனநல்லூரை சேர்ந்த சோமசுந்தரத்தின் மகன் சிவஞானமும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் தர்ஷினிக்கு வேறு இடத்தில் மணமகன் தேடும் முயற்சி நடந்ததால், தர்ஷினியும், சிவஞானமும் நேற்று முசிறி கள்ளர் தெரு மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, முசிறி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். மேலும் தர்ஷினி கொடுத்த மனுவை விசாரித்த சப்-இன்ஸ்பெக்டர் லதா, 2 பேரின் பெற்றோரையும் அழைத்து பேசினார். இதையடுத்து தர்ஷினி சிவஞானத்துடன் செல்வதாக கூறி, அவருடன் சென்றார்.