< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
காதல் திருமண ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
|29 Sept 2023 2:06 AM IST
காதல் திருமண ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
முசிறி:
முசிறி அருகே உள்ள கோடியம்பாளையம் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மகள் சங்கீதா(வயது 19). இவர் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், அதே தெருவை சேர்ந்த கணபதியின் மகன் நாகராஜுக்கும்(30) காதல் ஏற்பட்டு, கடந்த 6 மாதமாக காதலித்து வந்தனர். இதையடுத்து அவர்கள் பழனிக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர். இதற்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், காதல் திருமண ஜோடி முசிறி அனைத்து மகளிர் ேபாலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து அவர்களின் உறவினர்களை இன்ஸ்பெக்டர் சித்ரா போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து, பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சங்கீதாவின் உறவினர்கள் சம்மதம் தெரிவிக்காத நிலையில், அவரை நாகராஜ் பெற்றோருடன் அனுப்பி வைத்தார்.