< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
பிரகதீஸ்வரர் கோவிலுக்கு வந்த காதல் ஜோடிகள்
|15 Feb 2023 1:09 AM IST
பிரகதீஸ்வரர் கோவிலுக்கு காதல் ஜோடிகள் வந்தனர்.
மீன்சுருட்டி:
உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காதல் ஜோடிகள் பூங்காக்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று, பரிசுகளை கொடுத்து தங்கள் அன்பை பறிமாறிக்கொண்டனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலுக்கு ஒரு சில காதல் ஜோடிகள் வந்திருந்தனர். அவர்களில் சிலர் சாமி தரிசனம் செய்துவிட்டு, கோவில் வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததை காண முடிந்தது. மேலும் கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.