தர்மபுரி
தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
|தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்தவர் பாரத் (வயது 22). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சுவேதா (21) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களுடைய காதலுக்கு சுவேதாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் பாதுகாப்பு கேட்டு நேற்று தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். அங்கு சுவேதா கொடுத்த கோரிக்கை மனுவில், நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டதால் எனது கணவரின் குடும்பத்தினருக்கு சிலர் கொலை மிரட்டல் விடுகிறார்கள். இதே போல் எங்களுக்கும் மிரட்டல் வந்துள்ளது. எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.