< Back
மாநில செய்திகள்
போலீஸ் நிலையத்தில் காதல் திருமண ஜோடி தஞ்சம்
திருச்சி
மாநில செய்திகள்

போலீஸ் நிலையத்தில் காதல் திருமண ஜோடி தஞ்சம்

தினத்தந்தி
|
30 Jun 2023 1:15 AM IST

போலீஸ் நிலையத்தில் காதல் திருமண ஜோடி தஞ்சமடைந்தது.

காட்டுப்புத்தூர்:

கரூர் தாந்தோணிமலைைய சேர்ந்த ராஜகோபாலின் மகன் சசிகுமார்(வயது 25). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ேமலும் இவரும், அங்கு பணிபுரிந்த காட்டுப்புத்தூர் அருகே உள்ள மேலமஞ்சமேடு பகுதியை சேர்ந்த பெருமாளின் மகள் ஆர்த்தியும்(25) கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து பரமத்தி வேலூர் அருகில் உள்ள பச்சைமலை பெத்தனூர் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்ட அவர்கள், தங்களது குடும்பத்தினரிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இது குறித்து 2 பேரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்த சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், அவர்களை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினார். அப்போது அவர்களின் சசிகுமார் குடும்பத்தினர், அவர் திருமணம் செய்ததை ஏற்கவில்லை என்று தெரிகிறது. இது பற்றி சசிகுமாரிடம் கேட்டபோது, அவர் தனது காதல் மனைவி ஆர்த்தியுடன் செல்வதாக கூறினார். இதையடுத்து ஆர்த்தியின் பெற்றோருடன், அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்