< Back
மாநில செய்திகள்
போலீஸ் நிலையத்தில் காதல் திருமண ஜோடி தஞ்சம்
திருச்சி
மாநில செய்திகள்

போலீஸ் நிலையத்தில் காதல் திருமண ஜோடி தஞ்சம்

தினத்தந்தி
|
24 Feb 2023 2:06 AM IST

போலீஸ் நிலையத்தில் காதல் திருமண ஜோடி தஞ்சமடைந்தது.

சமயபுரம்:

சமயபுரம் அருகே உள்ள நெய்குப்பை காமராஜர் காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் பிரேம்குமார்(வயது 23). இவர் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த செல்வகுமாரின் மகளான என்ஜினீயரிங் படித்துள்ள ஆர்த்தியா (23) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் நேற்று வயலூரில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், ஆர்த்தியாவின் பெற்றோர், தங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று அஞ்சிய காதல் திருமண ஜோடி நேற்று சமயபுரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களின் பெற்றோரை போலீஸ் நிலையம் வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆர்த்தியா, பிரேம்குமாருடன் செல்வதாக கூறியதை தொடர்ந்து, அவரை பிரேம்குமாருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்