நாமக்கல்
பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில்பாதுகாப்பு கேட்டு கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்
|பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சேளூர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மகன் வசந்தகுமார் (வயது 22). பள்ளிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். பள்ளிபாளையம் அருகே ஆவாரம்பாளையம் ஆயக்காட்டூரை சேர்ந்த சங்கர் மகள் சவுந்தர்யா (21). இவர் ஈரோடு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் வசந்தகுமார், சவுந்தர்யா ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. மேலும் சவுந்தர்யாவுக்கு திருமண ஏற்பாடு நடந்து வந்ததாக தெரிகிறது
இதனை தொடர்ந்து காதல் ஜோடியினர் நேற்று ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு வேலூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சவுந்தர்யா தனது காதல் கணவருடன் தான் செல்வேன் என கூறியதால் போலீசார் அவரை வசந்தகுமாருடன் அனுப்பி வைத்தனர்.