< Back
மாநில செய்திகள்
போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

தினத்தந்தி
|
8 Nov 2022 9:14 PM IST

சாணார்பட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

சாணார்பட்டி அருகே உள்ள வீரசின்னம்பட்டியை சேர்ந்தவர் அய்யப்பன். அவருடைய மகன் கருப்பையா (வயது 23). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். அதேமில்லில், துவரங்குறிச்சியை சேர்ந்த அபிராமி (19) என்பவரும் வேலை செய்தார். இவர்கள் 2 பேரும், கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில் வீட்டை விட்டு வெளியேறிய காதல்ஜோடி, கோபால்பட்டியில் உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கருதி, சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து இருதரப்பு பெற்றோரையும் வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். காதல்ஜோடி 2 பேரும் மேஜர் என்பதால், அவர்கள் விருப்பப்படி வாழ போலீசார் அனுப்பி வைத்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்