மதுரை
வேலைக்கு சென்ற இடத்தில் மலர்ந்த காதல்-சுவீடன் யோகா ஆசிரியரை மணந்த மதுரை பெண் என்ஜினீயர்-திருப்பரங்குன்றத்தில் தமிழ் கலாசாரப்படி திருமணம்
|வேலைக்கு சென்ற இடத்தில் காதலித்து சுவீடன் நாட்டு யோகா ஆசிரியரை தமிழ் கலாசார முறைப்படி மதுரை பெண் என்ஜினீயர் நேற்று திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொண்டார்.
திருப்பரங்குன்றம்,
வேலைக்கு சென்ற இடத்தில் காதலித்து சுவீடன் நாட்டு யோகா ஆசிரியரை தமிழ் கலாசார முறைப்படி மதுரை பெண் என்ஜினீயர் நேற்று திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொண்டார்.
காதல் மலர்ந்தது
மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்தவர் திருச்செல்வன். இவருடைய மகள் நிவேதிகா. என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் மேற்படிப்புக்காக சுவீடன் சென்றார். அங்கு படிப்பை முடித்து ஒரு நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் யோகா ஆசிரியரான சுவீடன் நாட்டை சேர்ந்த எட்வர்ட் விம், நிவேதிகா ஆகியோர் நண்பர்களாக பழகி உள்ளனர். நாளடைவில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. நிவேதிகா, எட்வர்ட் விம் ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதற்காக அவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூறினர். அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.
தமிழ் கலாசாரப்படி திருமணம்
இதையடுத்து நேற்று மதுரை திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் இவர்களுக்கு திருமணம் நடந்தது. மணமகன் எட்வர்ட் விம், அவரது பெற்றோர், அந்நாட்டைச் சேர்ந்த நண்பர்கள், உறவினர்கள் அனைவருமே தமிழ் கலாசார முறைப்படி பட்டு வேட்டி, பட்டுசட்டை பட்டுச்சேலை அணிந்து இருந்தனர். தமிழ் கலாசாரப்படி அம்மி மிதித்தல், மெட்டி அணிதல் உள்ளிட்ட சம்பிரதாயங்களும் நடந்தன. சுவீடன் நாட்டு இளைஞரை மணம் முடித்தபோதிலும் தமிழ் கலாசாரத்திற்கு முக்கியவத்துவம் கொடுத்த மதுரை பெண்ணை உறவினர்கள் பாராட்டினர்.