< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
லாட்டரி சீட்டுகள் விற்றவர் சிறையில் அடைப்பு
|17 Oct 2023 10:41 PM IST
லாட்டரி சீட்டுகள் விற்றவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆலங்குடி அருகே செம்பட்டிவிடுதி பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டுகளை விற்ற வடவாளம் ஊராட்சி மேலக்காயம்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 47) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 2 செல்போன்கள், கேரள லாட்டரி சீட்டுகள், ரூ.740 ஆகியவற்றை பறிமுதல் செய்து செம்பட்டிவிடுதி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணனை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய்பாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.