< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
|1 July 2023 12:15 AM IST
முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் நேற்று பல்வேறு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்
முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் நேற்று பல்வேறு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடை மேலக்காடு பகுதியை சேர்ந்த சித்திரவேல் என்கிற காளிமுத்து (வயது45) என்பவர் தடை செய்யப்பட்ட கேரளா மாநில லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிமுத்துவை கைது செய்தனர்.