< Back
மாநில செய்திகள்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
|17 Oct 2023 2:15 AM IST
பொள்ளாச்சி அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி அருகே ஜமீன்முத்தூர் பஸ் நிறுத்தத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் லாட்டரி சீட்டு விற்றது வடுகபாளையத்தை சேர்ந்த முத்து(வயது 27) என்பதும், கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 12 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.