< Back
மாநில செய்திகள்

தஞ்சாவூர்
மாநில செய்திகள்
லாட்டரி சீட்டு விற்றவர் கைது

21 Sept 2023 2:38 AM IST
தஞ்சையில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர்;
தஞ்சை மேரீஸ்கார்னர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக தஞ்சை தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தஞ்சை வடக்கு பூக்கார தெருவை சேர்ந்த செந்தில்குமார்(வயது 42) என்பதும், அவர் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து செந்தில்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.