< Back
மாநில செய்திகள்
11 டன் ரேஷன் அரிசியுடன் லாரி பறிமுதல்-2 பேர் கைது
வேலூர்
மாநில செய்திகள்

11 டன் ரேஷன் அரிசியுடன் லாரி பறிமுதல்-2 பேர் கைது

தினத்தந்தி
|
26 Sep 2023 7:03 PM GMT

வேலூர் அருகே 11 டன் ரேஷன் அரிசி கடத்திய லாரியை பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் அருகே 11 டன் ரேஷன் அரிசி கடத்திய லாரியை பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் இருந்து லாரி மூலம் ஆந்திர மாநிலத்துக்கு ரேஷன் கடத்தப்படுவதாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார், இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை மடக்கி சோதனை செய்தவாறு இருந்தனர்.

அப்போது ஒரு லாரயில் அரிசி மூட்டைகள் இருந்தது. சந்தேகமடைந்த போலீசார் மூட்டைகளை பிரித்து பார்த்தபோது ரேஷன் அரிசி என்பது தெரியவந்தது. பின்னர் லாரியில் இருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் குடியாத்தத்தை அடுத்த மேலாலத்தூர் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சிவக்குமார் (41) மற்றும் நாகராஜ் (46) ஆகியோர் என்பது தெரியவந்தது.

பின்னர் ரேஷன் அரிசி கடத்தியதாக இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சுமார் 11 டன் ரேஷன் அரியை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

அதிக விலைக்கு..

கைது செய்யப்பட்ட 2 பேரும் குடியாத்தம், பள்ளிகொண்டா மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதை ஆந்திராவுக்கு கொண்டு சென்று பாலீஷ் போட்டு அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி திருவலம் சிவில் சப்ளை குடோனில் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக ஒருவரை தேடி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்