< Back
மாநில செய்திகள்
சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தில் லாரி உரிமையாளர்கள் போராட்டம்
மாநில செய்திகள்

சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தில் லாரி உரிமையாளர்கள் போராட்டம்

தினத்தந்தி
|
1 April 2023 3:26 PM IST

சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை,

நாடு முழுவதும் 460 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் 29 சுங்கச்சாவடிகள் உள்ளது. இதில் 15 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மீதம் உள்ள 14 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதம் முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுங்கச்சாவடி கட்டணம் 5% முதல் 10% வரை உயர்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மணல் லாரி, டேங்கர் லாரி மற்றும் சரக்கு போக்குவரத்து லாரி உள்ளிட்ட அனைத்து சங்கத்தினரும் இணைந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுங்கச்சாவடிகள் கட்டண உயர்வால் லாரி, வேன் மற்றும் சரக்கு வாகனங்கள் வாடகை உயரும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் டீசல், காப்பீடு உள்பட பல்வேறு விலை உயர்வால் லாரி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


மேலும் செய்திகள்