< Back
மாநில செய்திகள்
லாரி உரிமையாளர் தற்கொலை
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

லாரி உரிமையாளர் தற்கொலை

தினத்தந்தி
|
13 Oct 2023 8:26 PM IST

லாரி உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சோழிங்கநல்லூர் நியு குமரன் நகர் 11-வது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் ஆறுமுகம் (வயது 40). இவருடைய மனைவி பாரதி. 2 மகள்கள் உள்ளனர். ஆறுமுகம் சொந்தமாக லாரி, பொக்லைன் எந்திரம் வைத்திருந்தார். இவருக்கு உரிய சொத்துகள் பல ஆண்டுகளுக்கு முன்பே விற்கப்பட்டு விட்டதாக தெரிகிறது. தற்போது அந்த நிலங்கள் இருந்தால் அதிக விலைக்கு விற்றிருக்கலாம் என மன உளைச்சலுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று தனது 2 மகள்களையும் பாக்சிங் வகுப்புக்கு அழைத்து சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தார். வீட்டில் ஆறுமுகம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

பக்கத்து அறையில் தூங்கி கொண்டிருந்த அவருடைய மனைவி எழுந்து வந்து பார்த்தபோது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஏற்கனவே ஆறுமுகம் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த செம்மஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்