< Back
மாநில செய்திகள்
லாரி மோதி கல்லூரி மாணவர் பலி
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

லாரி மோதி கல்லூரி மாணவர் பலி

தினத்தந்தி
|
7 July 2022 2:13 PM IST

சோழிங்கநல்லூர் அருகே லாரி மோதி கல்லூரி மாணவர் பலியானார்.

சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 4 பேர் நேற்று முன்தினம் அதிகாலை சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணை அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே பாதையில் நாவலூர் நோக்கி சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத லாரி ஒன்று அவர்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் சந்திரகாந்த் (வயது 20) சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இவர் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர். மேலும் ஆந்திர மாநிலம் நெல்லுரை சேர்ந்த சிவக்குமார் ( 20), குண்டூரைசேர்ந்த லோகித் (20), ஹைதராபாத்தை சேர்ந்த சசிகுமார் (22) ஆகியோரும் காயமடைந்து சிகிச்சைக்காக மேடவாக்கம் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்