< Back
மாநில செய்திகள்
லாரி மோதி கல்லூரி மாணவர் பலி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

லாரி மோதி கல்லூரி மாணவர் பலி

தினத்தந்தி
|
25 Oct 2023 11:55 PM IST

லாரி மோதி கல்லூரி மாணவர் பலியானார்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை காட்டுநாவலை சேர்ந்தவர் முனியாண்டி மகன் பிரவீன் (வயது 19). இவர், தஞ்சாவூரிலுள்ள சரபோஜி கல்லூரியில் படித்து வந்தார். பிரவீனும், அவரது நண்பரும் மோட்டார் சைக்கிளில் இன்று புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். மச்சுவாடி அருகே வந்தபோது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதி அருகே இருந்த மற்றொரு லாரி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பிரவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கணேஷ்நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பிரவீன் நண்பரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே பிரவீன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்