< Back
மாநில செய்திகள்
நாகர்கோவிலில் லாரி மோதி மின்கம்பம்- மோட்டார் சைக்கிள் சேதம்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

நாகர்கோவிலில் லாரி மோதி மின்கம்பம்- மோட்டார் சைக்கிள் சேதம்

தினத்தந்தி
|
1 Jun 2023 3:30 AM IST

நாகர்கோவிலில் லாரி மோதி மின்கம்பம்- மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்தது.

நார்கோவில்:

நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியின் அருகே உள்ள சாலையோரம் மின்கம்பங்கள் உள்ளது. நேற்று அதிகாலை அந்த சாலையில் தஞ்சாவூர் பதிவெண் கொண்ட லாரி ஒன்று வேகமாக வந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இருப்பினும் லாரி நிற்காமல் அங்கிருந்த ஒரு மின்கம்பத்தின் மீதும் பயங்கரமாக மோதி நின்றது. இந்த விபத்தில் லாரி டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. லாரி மோதியதில் மின்கம்பம் முறிந்து விழுந்தது. விபத்து நடந்த நேரம் அதிகாலை என்பதால் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இல்லை. இதனால் பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்