< Back
மாநில செய்திகள்
கத்திமுனையில் லாரி டிரைவரை மிரட்டி வழிப்பறி - 2 வாலிபர்கள் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கத்திமுனையில் லாரி டிரைவரை மிரட்டி வழிப்பறி - 2 வாலிபர்கள் கைது

தினத்தந்தி
|
21 July 2022 12:23 PM IST

கும்மிடிப்பூண்டி அருகே கத்திமுனையில் லாரி டிரைவரை மிரட்டி வழிப்பறியில் ஈடுப்பட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சாலையோரம் நின்ற லாரியில் டிரைவர் அம்ரோஸ் கிங்சிலி செல்வினை (வயது 52), கத்தி முனையில் மிரட்டிய 4 பேர், செல்போன் மற்றும் ரொக்கப்பணம் ஆயிரத்தை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து நடராஜன் (20), சஞ்சய் (20) ஆகிய 2 வாலிபர்களை நேற்று கைது செய்தனர். அதேபோல் பொன்னேரி அருகே அருமந்தை கிராமத்தில் உள்ள பஜாரில் ரவி (வயது 52) என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பாபு (25) என்பவர் கடைக்கு சென்று கத்தியை காட்டி மிரட்டி ரூ.8 ஆயிரத்தை ரவியிடம் பறித்துவிட்டு தப்பி சென்றார். இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மேலும் செய்திகள்