< Back
மாநில செய்திகள்
வாய்த்தகராறில் லாரியை ஏற்றி டிரைவர் படுகொலை - மற்றொரு டிரைவர் தப்பி ஓட்டம்
சென்னை
மாநில செய்திகள்

வாய்த்தகராறில் லாரியை ஏற்றி டிரைவர் படுகொலை - மற்றொரு டிரைவர் தப்பி ஓட்டம்

தினத்தந்தி
|
22 Dec 2022 12:14 PM IST

வாய்த்தகராறில் லாரியை ஏற்றி டிரைவரை கொலை செய்த மற்றொரு டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னையை அடுத்த புழல்-அம்பத்தூர் சாலையில் புழல் கேம்ப் அருகே லாரி நிறுத்துமிடம் உள்ளது. இங்கு நேற்று ஏராளமான லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன.

அதில் 2 லாரி டிரைவர்களுக்கு இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இரு வருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த ஒரு லாரி டிரைவர், இன்னொரு லாரி டிரைவர் மீது தனது லாரியை ஏற்றினார். இதில் லாரி சக்கரத்தில் சிக்கிய இன்னொரு லாரி டிரைவர், உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

உடனே லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கொலை செய்யப்பட்ட இன்னொரு லாரி டிரைவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட அந்த லாரி டிரைவர் யார்?. அவரை லாரியை ஏற்றி கொலை செய்த மற்றொரு லாரி டிரைவர் யார்? என்பது உடனடியாக ெதரியவில்லை. இதுபற்றி புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்