< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
குறிஞ்சிப்பாடி அருகே மோட்டார் சைக்கிள் மோதி லாரி டிரைவர் சாவு
|26 Jun 2023 12:15 AM IST
குறிஞ்சிப்பாடி அருகே மோட்டார் சைக்கிள் மோதி லாரி டிரைவர் உயிரிழந்தார்.
குறிஞ்சிப்பாடி,
தஞ்சாவூர் மாவட்டம் திண்ணைநல்லூர் பகுதியை சோ்ந்தவர் லோகநாதன்(வயது 55). லாரி டிரைவர். சம்பவத்தன்று இவர் குள்ளஞ்சாவடி அருகே உள்ள சத்திரம் கிராமத்தில் இருந்து மரக்கன்றுகளை தனது லாரியில் ஏற்றிக்கொண்டு தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். கடலூர்-விருத்தாசலம் சாலையில் குறிஞ்சிப்பாடி அடுத்த தம்பிப்பேட்டை பகுதியில் உள்ள கடையில் டீ குடித்துவிட்டு லாரியில் ஏற முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று லோகநாதன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.