திருநெல்வேலி
லாரி டிரைவர் பலி
|மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் லாரி டிரைவர் பலி
பேட்டை:
ஆலங்குளம் அருகே உள்ள சீதபற்பநல்லூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் வெள்ளப்பாண்டி. இவரது மகன் ராஜபாண்டி (வயது 35). நெல்லை டவுனில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வேலை முடிந்து ராஜபாண்டி மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஆலங்குளம் அருகே உள்ள கருவாநல்லூர் நடுத்தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் ராஜா (23) என்பவர் மோட்டார் சைக்கிளில் நெல்லை டவுன் நோக்கி வந்து கொண்டிருந்தார். நெல்லை ராணி அண்ணா கல்லூரி அருகே வந்தபோது 2 மோட்டார்சைக்கிள்களும் மோதிக்கொண்டன. இதில் சம்பவ இடத்திலேயே ராஜபாண்டி இறந்தார்.
ராஜா படுகாயம் அடைந்தார். இவரை 108 ஆம்புலன்ஸில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து டவுன் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லத்துரை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.