< Back
மாநில செய்திகள்
ரெயிலில் அடிபட்டு லாரி டிரைவர் பலி
நாமக்கல்
மாநில செய்திகள்

ரெயிலில் அடிபட்டு லாரி டிரைவர் பலி

தினத்தந்தி
|
26 Feb 2023 12:15 AM IST

வெண்ணந்தூர் அருகே ரெயிலில் அடிபட்டு லாரி டிரைவர் இறந்தார்.

வெண்ணந்தூர்

சேலம் ரெயில்வே எல்லைக்கு உட்பட்ட வெண்ணந்தூர் அருகே ஆயிப்பாளையம் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் நேற்று அதிகாலை ரெயிலில் அடிபட்டு ஒருவர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த சேலம் ரெயில்வே போலீசார் மற்றும் வெண்ணந்தூர் போலீசார் இறந்தவர் உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர். மேலும் போலீஸ் விசாரணையில் ரெயிலில் அடிபட்டு இறந்தவர், வெண்ணந்தூர் அருகே உள்ள தேங்கல்பாளையம் குடித்தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (வயது 40). லாரி டிரைவர் என்பதும் தெரியவந்தது. பின்னர் இவர் குடிபோதையில் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்