ராணிப்பேட்டை
லாரி டிரைவருக்கு 6 மாதம் சிறை
|விபத்தில் ஒருவர் இறந்த வழக்கில் லாரி டிரைவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புதுமாங்காடு கிராமம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 32). அவரது நண்பர் கோபிநாத் (34) ஆகிய இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு திருவலத்திலிருந்து ராணிப்பேட்டை நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது திருவலம் நோக்கி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மோட்டார்சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த பாஸ்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து வந்த கோபிநாத் பலத்த காயமடைந்தார்.
இந்த விபத்து தொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ராணிப்பேட்டை கோர்ட்டில் கடந்த 5 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. விபத்தை ஏற்படுத்திய ஆற்காடு தேவரடி தெருவை சேர்ந்த டிரைவர் ரிஸ்வான் என்பவருக்கு 6 மாதம் சிறைத் தண்டைனையும், ரூ.2000 அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு நவீன்துரைபாபு தீர்ப்பு வழங்கினார்.