சேலம்
லாரி டிரைவருக்கு 5 ஆண்டு சிறை
|தொழிலாளியை கொலை செய்ய முயற்சி செய்ததாக லாரி டிரைவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருவிழா நடைபெற்றது. அப்போது முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜேஸ்குமார் (வயது 30) என்பவருக்கும், லாரி டிரைவர் சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திமடைந்த சரவணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜேஸ்குமாரை குத்தினார். இதையடுத்து படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி கொலை முயற்சி வழக்கில் சரவணனை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் ராஜேஸ்குமாரை கொலை செய்ய முயன்ற சரவணனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கிறிஸ்டல் பபிதா தீர்ப்பு அளித்தார்.