< Back
மாநில செய்திகள்
தேன்கனிக்கோட்டை, கெலமங்கலத்தில் ஜல்லிக்கற்கள், மணல் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

தேன்கனிக்கோட்டை, கெலமங்கலத்தில் ஜல்லிக்கற்கள், மணல் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்

தினத்தந்தி
|
9 Jun 2023 12:30 AM IST

ராயக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் மாதேஷ் மற்றும் அதிகாரிகள் தேன்கனிக்கோட்டை- தளி சாலையில் பஜ்ஜேப்பள்ளி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 8 யூனிட் ஜல்லிக்கற்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

விசாரணையில் அன்னியாளத்தில் இருந்து ஓசூருக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ஜல்லிக்கற்கள் கடத்தியதாக பீகாரை சேர்ந்த பங்கஜ்குமார் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர். லாரி பறிமுதல் செய்யப்பட்டது. தேன்கனிக்கோட்டை வருவாய் ஆய்வாளர் சலீம் பாஷா, எருதுகோட்டை கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் கெலமங்கலம் 4 ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 லாரிகளை சோதனை செய்தனர். இதில் 2 லாரிகளில் தலா 2 யூனிட் எம்.சாண்ட் மணலும், ஒரு லாரியில் 6 யூனிட் ஜல்லிக்கற்களும் கடத்தி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து எம்.சாண்ட் மணல் கடத்திய கெலமங்கலம் அண்ணா நகரை சேர்ந்த சேகர் (32) என்பவரை கைது செய்தனர். மேலும் 3 லாரிகளை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்